ஸ்ரீமத் வேதாந்த தேசிகாய ந ம :
ராமானுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த்த தேசிகம்
ஸ்ரீ வேதாந்த்த தேசிகர் வைபவம்
( Song composed by : P.SundaraRajan , Mumbai )
ராக மாலிகா
ராகம் - சாமா தாளம் - ஆதி
பல்லவி
வேதாந்த்த தேசிகர் பாதார விந்தம் தொழ
பாப வினை அகன்று ஆன்ம அருள் சுரக்கும்
அருள் தரும் ஆரண நிகமாந்த்த மஹா தேசிகன் - வேதாந்த
அனுபல்லவி
புரட்டாசி திங்களிலே விபவ வருடம் வந்து ச்ரவணம் சிறக்க தூய தூப்புல் துலங்க வந்தார் - வேதாந்த
சரணம் - 1
திரு அனந்த சூரியாரின் துணைவி தொதாரம்பாளும்
அன்று கண்ட கனாவிலே ஸ்வர்ண கண்டை யை உண்டு
வேங்கடவன் அனுக்ரக அம்ச பூதராய் வந்து
வேங்கட நாதன் என்ற திருநாமம் தனைக் கொண்டார் - வேதாந்த
ராகம் - மோகனம் சரணம் - 2
ஐந்தாறு வயதினிலே அம்மான் அப்புள்ளா ருடன்
காலக்ஷேபம் கவனமுடன் கேட்கும் குணம் தனைக்கண்டு
நடாதூர் அம்மாளும் நல்ல பிள்ளை எனப் புகழ்ந்து
நானிலமும் போற்ற வாழ்வான் என்று ஆசி அளித்திட்டார் - வேதாந்த
ராகம் - ரஞ்சனி சரணம் - 3
திரு அயிந்தை தலமதில் ஔஷாதாத்திரி கிரி தன்ன்னில் கருடாழ்வார் சேவை கொண்டு ஞானப் பிரான் என்ற
ஹயக்ரீவரை ஆராதித்து அதி நிபுணத்வம் பெற்று பாதுகா சகஸ்ரம் முதல் பலப் பல க்ரந்தம் கண்டார்
- வேதாந்த
ராகம் - மத்யமாவதி சரணம் - 4
அரங்கனே அன்பு கூர்ந்து கவிதார்கிக சிம்மம் என்றும் அரங்க நாயகி மகிழ சர்வ தந்த்ர ஸ்வதந்த்ர ராகி கேணி ஒன்று தானே கட்டி தானே தன் சிலை வடித்து கலை பல கற்றுணர்ந்து கவிஞர் என போற்ற வாழ்ந்து திருவகிந்திபுரம் சிறக்க வாழ்ந்து ஸ்ருதப் பிரகாசிகா நூலைக் காத்து கலியன் மாறன் தமிழ் மறை போற்றிய கலியுக ஞான வைராக்ய பூஷணம் - வேதாந்த
For more songs on Azhwars and Acharyas please see the bookஆழ்வார் ஆச்சாரியர்கள் இன்னிசை விருந்து and
பூங்கோதை புகழ் மாலை by P.SunadaraRajan.
No comments:
Post a Comment