Wednesday, August 12, 2009

Text of Sri Renganai Panivai Maname

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம :

ராகம் - பீம்ப்லாஸ்
தாளம் -ஆதி

பல்லவி
ஸ்ரீரங்கனை பணிவாய் தினமே ( மனமே ) திருக்கல்யாண கோலத்திலே கோதையுடன் திகழும்

- ரங்கனை

அனுபல்லவி
கங்கையில் புனிதமாய காவிரிகள் நடுவே

பொங்கிடும் மங்களம் தரும் ரெங்கநாயகி மகிழும்

- ரங்கனை

சரணம்

சொல்லழகர் சொல்லின் செயலழகர்

நான் மறைகள் புகழ்ந்திடும் நடை அழகர்

கண்டெடுத்தான் கருங்குழல் கன்னி கோதையை

கனவில் வந்தே அவளை கவர்ந்திட்ட கண் அழகன் - ரங்கனை

சரணம் - 2

ஆழ்வார்கள் கொண்டாடும் அரங்க நகரவப்பன்

ஆண்டாளும் தேர்ந்தெடுத்த அழகு தெய்வம் அரங்கன்

ஆளவந்தார் எதிராஜர் தேசிகரும் மாமுனிகளும்

அனவரதம் அடி பணிந்தே அனுபவித்த அணி அரங்கன் - ரங்கனை

=================================

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

=================================

From the book on பூங்கோதை புகழ் மாலை

Composed by : P.SunadaraRjan.

No comments:

Post a Comment